பெரிய பணக்காரன் என்று கூறி தமிழ் நடிகை பூர்ணாவிடம் மோசடி ! வீடியோ எடுத்தபோது உஷாரான நடிகை !

சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா . இவரது இயற்பெயர் ஷும்னா காசிம் இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு , கொடிவீரன் , கந்தக்கோட்டை , தகராறு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவருக்கு படவாய்ப்புகள் எதுவுமே கிடைக்காத நிலையில் டிக் டாக்கில் கணக்கை துவங்கி அதில் வீடியோ பதிவிட்டு வருகிறார் .

கேரளாவில் தனது குடும்பத்துடன் வசித்துவந்த பூர்ணாவுக்கு டிக் டாக் மூலம் அறிமுகமாகியுள்ளார் அன்வர் என்ற நபர் அவர் தான் ஒரு நகைக்கடை அதிபரின் மகன் என்றும் தனக்கு கேரளா மற்றும் துபாயில் நகைக்கடை இருப்பதாகவும் கூறியுள்ளார் . அதை நம்பிய பூர்ணா அன்வருடன் பேச துவங்கியுள்ளார் .

தொடர்ந்து இனிக்க இனிக்க பேசி பூர்ணாவின் தொலைபேசி என்னை பெற்ற அந்த நபர் தொடர்ந்து பேசிவந்துள்ளனர் . ஒருகட்டத்தில் அந்த அன்வர் என்ற நபர் பூர்ணாவிடம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார் . பூர்ணா வீட்டை விட்டு வருவார் என்று எதிர்பார்த்த அன்வருக்கு ஏமாற்றம்

வீட்டுக்கு வந்து பெண் கேற்குமாறு கூறியுள்ளார் நடிகை பூர்ணா . சரி என்று 6 பேர் வந்துள்ளனர் பெண் பார்க்க. ஆனால் அதில் அன்வர் என்ற அந்த நம்பர் இல்லை இதனால் சந்தேகமடைந்த பூர்ணா நைசாக பேசி அவர்களை அனுப்பிவைத்துள்ளார் .

அவர்கள் வீட்டின் பல பகுதிகளையும் , கார் உள்ளிட்டவற்றையும் செல் போனில் வீடியோ எடுத்தது CCTV கேமரா மூலம் தெரியவந்தது . உடனே உஷாரான பூர்ணா குடும்பத்தினர் ஆராய்ந்ததில் அன்வர் என்று கூறப்பட்ட அந்த நபரின் பெயர் ரபிக் என்பது தெரியவந்தது .

பூர்ணா உஷாரானதை அறிந்த அந்த கும்பல் ரகசியங்களை வெளியிட்டு சினிமா வாழ்க்கையை கெடுக்காமல் இருக்க பணம் கேட்டுள்ளனர் . உடனே பூர்ணா குடும்பத்தினர் காவல்துறையில் புகாரளித்தனர் .

தொடர்ந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் ராமநாதபுரத்தை சேர்ந்த அந்த கும்பலை சேர்ந்த ரபிக் உள்ளிட்ட 4 பேரை கைதுசெய்துள்ளனர் . அந்த கும்பலிடம் நடந்த விசாரணையில் பல உண்மைகள் வெளியாகியுள்ளது .

Click  தெய்வமகள் அண்ணியார் காயத்ரியின் மகளாக இது..? செம மார்டன் உடையில் புகைப்படத்தை பார்த்து வாயடைத்த ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.