சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மகன் ஃபெனிக்ஸ் மரணம் : இளம் நடிகை மனித உரிமை ஆணையத்தில் புகார்.

பிரபல நடிகை சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் ஷனம் ஷெட்டி. இவர் தமிழில் அம்புலி படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து இவர் கதம் கதம், சவாரி, சிபிராஜ் நடித்த வால்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு நடித்து வரும் மஹா படத்தில் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில், சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ்க்கு ஆதரவாக வீடியோ பதிவில் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து தற்போது சனம் ஷெட்டி, இச்சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருக்கும் தவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அனைவரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும், அப்போது தான் அழுத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Click  கடற்கரையில் நடனமாடும் அழகுதேவதை ! பல லட்சம் பேர் பார்த்து சொக்கிப்போன வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.