கவுதம் வாசுதேவ்மேனன் வெளியிட்ட `மனசே நமஹா’ வைரல் ஆகும் காதல் குறும்படம்.!!

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ‘மனசே நமஹா’ எனும் தெலுங்கு குறும்படத்தின் தமிழ் டப்பிங் பதிப்பை தனது ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

தீபக் ரெட்டி இயக்கத்தில் அஷ்வின் விராஜ், த்ரிஷிகா சந்தர், ஶ்ரீ வள்ளி ராகவேந்தர், ப்ரித்வி ஷர்மா, பன்னி அபிரான், பேப்ய் சஹஸ்ரா, சத்ய வர்மா, திப்பக் வர்மா ஆகியோர் நடித்து வெளியான தெலுங்கு குறும்படம் ‘மனசா நமஹா’. கடந்த மார்ச் 28-ஆம் தேதி கலா மீடியாவொர்க்ஸ் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது.

மனசே நமஹா குறும்படம்

இந்த குறும்படம் வெளியானதும் டோலிவுட் பிரபலங்கள் உட்பட பலரது இதயங்களை வென்றதாக தெரிகிறது. இதனை பார்த்து அசந்துபோன நம்ம இயக்குநர் கவுதம் மேனனும், தீப்பக் ரெட்டியை அழைத்து, அந்த குறும்படத்தை தமிழில் வழங்க விரும்புதாகக் கூறியுள்ளார்.

கவுதம் மேனனை சந்திக்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசையில், இருந்த தீபக் ரெட்டிக்கு, கவுதம் வாசுதேவ் மேனன் பெயருக்கு அடுத்தபடியாக அவரது பெயரைப் பார்ப்பது, தனது மிகப்பெரிய கனவு நனவானதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியடைந்துள்ளார். அவரது நெகிழ்ச்சியான பதிவு பலரையும் கலங்கடித்துள்ளது.

அறிவித்தபடி, கௌதம் மேனன் நேற்று மாலை 6 மணிக்கு ‘மனசே நமஹா’ குறும்படத்தை தமிழில் வெளியிட்டார். இப்போது இந்த காதல் குறும்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துவருகிறது.

Click  தம்பியின் பிறந்தநாளில் ஆச்சர்யமான சர்ப்ரைஸ் தந்த நடிகர் ராகவா லாரன்ஸ் !

Leave a Reply

Your email address will not be published.