படு கிளாமராக போட்டோ ஷூட் எடுத்த பிரபல சீரியல் நடிகை பிரியங்கா..!! வைரலாகும் புகைப்படங்கள் !!
விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றின் மொழி சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை பிரியங்கா எம் ஜெயின்.இவர் 1998 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதைத் தொடர்ந்து கன்னட படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் 2015 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் ராங்கிதரங்கா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இதையடுத்து 2016 ஆம் ஆண்டு கோலி சோடா என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார்.இவருக்கு தெலுங்கில் சல்தே சல்தே படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தெலுங்கில் மௌன ராகம் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார்.

இதற்கிடையில் இவர் பிரதீக் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.தமிழில் மௌன ராகம் சீரியல் காற்றின் மொழி என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு பிரியங்காவே கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதில் கதாநாயகனாக சஞ்சீவும் நடித்து வருகிறார்.இந்த சீரியலில் ஊமை பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


இவர் சீரியல்களில் குடும்ப பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றும் பிரியங்கா அடிக்கடி மாடன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்நிலையில் தற்போது படு கிளாமரான உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் பிரியங்கா.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

