புரட்டி போட்ட புயலுக்கு நடுவே செம குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை..!! வைரலாகி வரும் வீடியோ !! 

கடந்த சில நாட்களுக்கு முன்பு டவ் தே என்ற புயல் தென்மேற்கு அரபி கடல் பகுதியில் உருவானது.இந்த புயலானது குஜராத்தில், சவுராஷ்டிரா கடற்கரையின் டியு மற்றும் உனா இடையே கரையை கடந்தது. இதனால் குஜராத், சவுராஷ்டிரா, மும்பை, ராஜஸ்தான் போன்ற பகுதியில் கனமழை பெய்தது.குறிப்பாக டவ் தே புயல் குஜராத் மாநிலத்தில் பல பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

டவ் தே புயலால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.இந்த வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே பிரபல நடிகையான தீபிகா சிங் நடனமாடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரிடம் இருந்து கடும் விமர்சனங்களை பெற்று வருகிறார்.

டவ் தே புயலின் போது காற்றின் வேகம் 114 கி.மீ. ஆக இருந்தது மற்றும் 23 செ.மீ. மழை பெய்தது.முக்கியமாக மும்பை கடலின் சீற்றம் அதிகரித்தால் கடலில் அலைகள் கொந்தளித்து பல அடி உயரம் ராட்சத அலைகள் எழுந்தன.இந்த புயல் காரணமாக மராட்டியத்தில் மாநிலத்தின் மும்பை போன்ற கடலோர மாவட்டங்களில் 12 பேரின் உயிர் இந்த புயல் பறி போனது.

தற்போது டவ் தே புயல் காரணமாக வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே பிரபல நடிகையான தீபிகா சிங் நடனமாடி எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இன்ஸ்டாகிராமில் பதிவில் “புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது அதுவாகவே கடந்து போகும்” என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பல நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Click  ஒருபக்கம் வழக்கறிஞர் மறுபக்கம் திரைப்பட இயக்குனர் ! புகழின் உச்சியில் இருக்கும்போதே இறந்த சோகம்!

Leave a Reply

Your email address will not be published.