வருத்தம் தெரிவித்த அஜித்: ஒகே சொன்ன சந்தோஷ் நாரயணன்! நடந்தது இது தான்.!!

ஊரடங்கு காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் தங்களுக்கு நடந்த அனுபவங்கள், குறிப்பாக அவர்கள் கடந்து வந்த பாதையை குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த வரிசையில் இசைஅமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் அஜித்துடன் நடந்த முதல் சந்திப்பு பற்றி கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் குறித்து பல்வேறு பிரபலங்களும் புகழ்ந்துள்ளதை பற்றி நிறைய கேட்டுள்ளோம். அவருடன் பல ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அந்த வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட போது நடந்த ஒரு ஸ்வரைசமான சம்பவம் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ஒருமுறை நான் அவரை ஏர்போர்டில் சந்தித்தேன்.அப்போது என்னை யாரென்று தெரியாமல் என் கையை பிடித்துக்கொண்டு 5 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார்.

பின்பு என்னிடம் என்ன செய்ரீங்க என்று கேட்டதும், நான் மியூசிக் டேரக்டரா இருக்கேன் என்று சொன்னேன். அதற்கு அவர், என்னை யாரென்று தெரியாமலே , அப்படியா நல்லா பண்ணுங்க பெரிய ஆளா வரணும் நீங்க என்று சொன்னார்.

பின்னர் என் மனைவி தான் என்னை பற்றி அஜித்திடம் சொன்னார். அதன் பிறகு என்னை அவர் தனியாக அழைத்து சென்று ரொம்பா சாரிங்க உங்களை தெரியவில்லை என்று சொன்னார்.அதே போல அவரிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் கூட

மிகவும் கனிவாக வெளியே வந்து புகைப்படம் எடுத்துக்கலாம் என்று சொன்னார். அவர் இவ்வளவு தன்மையாக பேச வேண்டும் என்று அவசியமே இல்லை. ஆனால், அனைவரிடமும் அவர் மிகவும் கனிவாக தான் பேசினார்.

Click  அம்மாவின் கல்யாண பரிசு வனிதா வெளியிட்ட புகைப்படம்...குவியும் வாழ்த்துக்கள்.!

Leave a Reply

Your email address will not be published.