நடிகை நிவேதா பெத்துராஜ் கொடுத்த ஹாட்டான போஸ்..!! மயங்கி போன ரசிகர்கள்!!
தமிழில் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.இவர் மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்து வந்தவர்.இவர் தனது பள்ளி படிப்பை தூத்துக்குடியில் முடித்து விட்டு துபாயில் 20 வருடங்களாக வாழ்ந்து வந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு அரேபிய நாடுகளில் நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்தியா பட்டத்தினை வென்றார்.

இவர் நடித்த ஒரு நாள் கூத்து படத்தில் அடியே அழகே பாடல் இளைஞர்களின் மனதில் மிகவும் பிரபலம் ஆனது.இதன் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பின்னர் 2017 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்தார்.பின்னர் மெண்டல் மதிலோ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.

இவர் தெலுங்கில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் தெலுங்கு திரையுலகிலும் புகழ் பெற்றார்.இதை தொடர்ந்து தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திமிரு பிடிச்சவன் திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது தமிழில் பொன் மாணிக்கவேல், பார்ட்டி,ஜெகஜால கில்லாடி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது முன்னழகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
