4 நாட்கள் கடையை திறந்ததால் ஒரே குடும்பத்தில் 20 பேருக்கு கொரோனா இருவர் பலி ! மகிழ்ச்சியாக இருந்த குடும்பம் இன்று சோகத்தில்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது குறிப்பாக சென்னையில் அசுர வேகத்தில் பரவிவருகிறது கொரோனா இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சில நாட்கள் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது . அப்போது கொரோனா பரவல் அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கு சென்னையில் அமலுக்கு வந்தது .

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டபோது சென்னை பாண்டி பஜாரில் உள்ள பிரபல துணிக்கடை உரிமையாளர் தனது கடையை 4 நாட்கள் திறந்துள்ளார் . அப்போது கடைக்குவந்த சில வாடிக்கையாளர்கள் மூலம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது . இதனால் அவர் தன் கடையை பூட்டி விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார் .

ஏற்கனவே அவருக்கு தொற்று ஏற்பட்டதால் அவர் மூலம் அவரது மனைவி , 3 மகன்கள் , மருமகள்கள், பேர குழந்தைகள் என அனைவருக்கும் பரவியுள்ளது . நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர்கள் . சென்னை தியாகாயநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 75 வயது கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவி வயது 69 ஆகிய இருவரும் அனுமதிற்க்க பட்டுள்ளனர் மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர் .

இந்நிலையில் 69 வயதான உரிமையாளரின் மனைவி நேற்று கொரோனா தொற்றால் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் . 43 வயதான மகன் ஒருவரும் உயிரிழந்துள்ளார் . 75 வயதானவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் .

கடந்த மாதம் வரை மகிழ்ச்சியான கூட்டு குடும்பமாக வாழ்ந்த அந்த குடும்பம் 4 நாட்கள் கடையை திறந்த்தால் இருவரை இழந்து சோகத்தில் வாடுகிறது . கடையை திறந்தாள் கொரோனா வருமா ? மாஸ்க் போடலைனா கொரோனா வருமா ? கை கால்களை கழுவலைனா கொரோனா வருமா ? என்று கேட்பவர்கள் இனியாவது பாதுகாப்புடன் இருங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தையும் காக்கும் !

Click  உங்கள் முகம் பளபளப்பாக இருக்கவேண்டுமா ! இந்த எளிய வழியை பின்பற்றுங்கள்

Leave a Reply

Your email address will not be published.