ஜெயம் படத்தில் சதாவின் தங்கையாக நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க..!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் கதாநாயகி சதாவின் தங்கையாக நடித்தவர் தான் நடிகை பூர்ணிதா.இவர் ஜெயம் படத்தில் கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.அதன் பிறகு இவரை கல்யாணி என்று அழைத்து வந்தார்கள்.இவர் பிரபுதேவா மற்றும் லைலா நடித்த அள்ளித்தந்த வானம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இவர் 1990 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக ஜெயம் படத்தில் ஹீரோயின் சதாவின் தங்கையாக நடித்தார். இந்த படத்திற்கு பிறகு கத்திக்கப்பல், இளம்புயல், இன்பா போன்ற பல படங்களில் நடித்து வந்தார் கல்யாணி.பின்னர் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால்
சின்னத்திரை பக்கம் சென்றார்.

விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார் கல்யாணி. இவர் சன் தொலைக்காட்சியில் அண்ணாமலை என்ற சீரியலில் ராதிகா சரத்குமாரின் டீனேஜ் மகளாக நடித்து வந்தார்.அதன் பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் அம்மா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளினி பணியாற்றி வந்தார்.இவர் கடந்த ஆண்டு சின்னத்திரையில் இருந்து விலகினார். இவர் கர்ப்பமாக இருந்ததால் பணியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது.இவர் சமீபத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Click  பிகினி உடையில் ரசிகர்களை மயக்கும் கெட்டவன் பட நடிகை லேகா..!! செக்ஸியான போஸ்!!

Leave a Reply

Your email address will not be published.