தலைநகரம் 2வில் மீண்டும் வைகைப்புயல்: உறுதிப்படுத்திய – சுந்தர்.சி
நடிகர் வடிவேலு கூட்டணியுடன் இணைந்து சுந்தர்.சி ஹீரோவாக அறிமுகமான படம் தலைநகரம். இந்தப் படத்தில் நாய் சேகராக வந்து காமெடியில் கலக்கியிருப்பார் வடிவேலு. அதைத்தொடர்ந்து நகரம் படத்திலும் இருவர் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில் தலைநகரம் 2 படத்துக்கான கதையை ஊரடங்கு சமயத்தில் எழுதி முடித்துவிட்டார்களாம். மேலும் இந்தப்படத்திலும் சுந்தர்.சி.யும் வடிவேலுயும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தை சுந்தர்.சி நடித்த இருட்டு படத்தை இயக்கிய வி.இசெட்.துரை தான் இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.