நடிகை திவ்யா உன்னியை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா..?? இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்..!!
தமிழ் சினிமாவில் பார்த்திபன் நடிப்பில் வெளியான சபாஷ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை திவ்யா உன்னி.இதைத்தொடர்ந்து தமிழில் வேதம், பாளையத்தம்மன், சபாஷ், கண்ணன் வருவான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1981 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் பிறந்தார்.
இவர் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக நீ எத்ரா தன்யா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.திவ்யா தனது மூன்று வயதிலேயே பரதநாட்டிய நடன பயிற்சியை தொடங்கினார். இவர் பரதநாட்டியம்,குச்சிபுடி மற்றும் மோகினியாட்டம் போன்ற பல்வேறு நடன கலைகளை கற்று உள்ளார்.

இவர் பூக்கலம் வரவாய்,ஓ பேபி போன்ற மலையாள படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மோகன்லால்,மம்முட்டி, சுரேஷ் கோபி மற்றும் ஜெயராம் போன்ற நடிகர்களுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
பின்னர் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகி விட்டார்.

பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். திவ்யா மும்பையை சேர்ந்த கேரள இளைஞர் அருண் குமார் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில் தான் இவருக்கு அழகான குழந்தை பிறந்தது.இதை அறிந்த அவரது ரசிகர்கள் பலரும் திவ்யா உன்னிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
