அது நான் செய்த தவறு விஜயை சந்தித்து மன்னிப்பு கேட்பேன் : பிரபல இயக்குனரின் வருத்தம்.!!

தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னனாக இருப்பவர். சமீபத்தில் அவரின் பிறந்தநாள் முன்னிட்டு ட்விட்டர் தளம் அதகளப்பட்டது என்றால் அது மிகையாகாது. புதிய பட போஸ்டர், பேன் எடிட் டிசைன்கள், செலிபிரிட்டிகளின் வாழ்த்து, டான்ஸ் வீடியோ, ரசிகர்களின் த்ரோ பேக் நினைவுகள் என அந்த இரண்டு நாட்கள் பலவற்றை நாம் காண முடிந்தது.

இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப் படம் பற்றி தளபதி விஜய், ஜெயா டிவியில் முன்பு பேசிய க்ளிப்பிங்கை ரசிகர் ஒருவர் ஷேர் செய்தார். அந்த பதிவில் தான் இயக்குனர் சேரன் பின்வரும் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்தவை “ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார். நான் தான் தவமாய்தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.

அந்த தவறை நான் செய்திருக்க கூடாது.. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன்.. இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய் அவர்களை பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன்.. ஆனால் நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்.

அவரிடம் ஆட்டோகிராஃப் கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது.. ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்த தன்மை.. வாவ்… கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும்தான்.. அவ்வளவு டெடிகேஷன்… அதுவே இன்று அவரின் உயரம்..” என பதிவிட்டுள்ளார்.

Click  விஷாலின் ‘சக்ரா’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!! டிரைலரே இத்தனை மொழிகளில் ரிலீஸ் ஆகிறதா.?

Leave a Reply

Your email address will not be published.