பெற்றோர் சம்மதம் இல்லாமல் கடலுக்கு நடுவே மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை..!! எந்த நடிகை தெரியுமா.?

தமிழ் சினிமாவில் டுலெட் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதற்கு முன் இவர் இயக்குநர் அறிவழகன் இயக்கிய ஆறாது சினம் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

இவர் 1992 ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சவேரியார்பட்டி என்கிற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.இவர் திருச்சி கலைக்காவேரி கவின்கலை கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை இரண்டிலும் பரத நாட்டியம் பயின்றார். பின்னர் நடிப்பு பயிற்சி கூத்து பட்டறையில் இணைந்து நடிப்பை கற்று கொண்டார்.இவர் ஜீ தொலைக்காட்சியில் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்து வந்தார்.

பின்னர் இவர் நடித்த நாடகத்தை பார்த்து இயக்குனர் அறிவழகன் இவருக்கு ஆறாது சினம் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து டுலெட், திரௌபதி போன்ற படங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் ஓடிடியில் வெளியான மண்டேலா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாராட்டுகளை குவித்து வருகிறது.தற்போது மாயத்திரை,  ஜோதி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

ஷீலாக்கு திருமணம் நடக்கவில்லை என்று பலபேர் நினைத்து வந்தனர்.ஆனால் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் கூத்து பட்டறையில் தம்பி சோழனை(ராஜ்குமார்) சந்தித்துள்ளார். தம்பி சோழன் நாளைய இயக்குனரில் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.இவரது
குறும் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடலுக்கு நடுவே திருமணம் செய்து கொண்டனர்.

Click  நம்ம ஒரு பொண்ணுங்க என்ன சும்மாவா ! கிராமத்து தமிழ் பெண்களின் அழகிய நடனம் வைரலாக வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.