எப்பவும் இன்ஸ்டாவிலே சுத்தக் கூடாது.. இயக்குனரை கலாய்த்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தனது புதிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதற்கு மீண்டும் போற போக்குல் ஒரு போட்டோ ஷூட் என்று தலைப்பிட்டிருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் புகைப்படப் பதிவைப் பார்த்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார்,  “போற போக்குல பண்ணதுக்கே இப்படின்னா, பிளான் பண்ணி பண்ணிருந்தா வேற மாதிரி போலயே.. ஸ்டைலா இருக்கீங்களே… என்று கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் பதிவுக்கு பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன், “கமெண்ட போட்டோமா, ரெண்டு கலாய் கலாய்ச்சமா கடைய சாத்திட்டு போய் காப்பி தண்ணிய குடிச்சமானு இருங்க இயக்குநரே.

இன்ஸ்டாலயே சுத்திட்டு திரிய கூடாது” என்று நகைச்சுவையாக கமெண்ட் பதிவிட்டுள்ளார்.இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..

இவர்கள் இருவரும் இணைந்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ” டாக்டர்ஸ் ” படம் உருவாகி வருகிறது

Click  ஜூன் 27 ஆம் தேதியை திருமண தேதியாக தேர்ந்தெடுத்து ஏன்? - வனிதா விளக்கம்

Leave a Reply

Your email address will not be published.