விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நிகழ்ச்சியில் சித்ரா போட்ட செம்ம டேன்ஸ்..!!

மறைந்த VJ சித்ரா ஒரு சிறந்த நடன கலைஞர் என்பது எல்லோரும் அறிந்ததே. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியில் குமரனுடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது. சித்ராவின் நடனத்தை பற்றி பலரும் புகழ்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சித்ரா.இவர் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்ராவின் தற்கொலைக்கு பிறகு அவர் நடித்த சீரியல் வீடியோக்கள் மற்றும் அவர் நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. தற்போது சித்ரா குமரன் நடனமாடிய வீடியோ வெளியாகி உள்ளது.இதை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த வீடியோவை நிறைய டைம் பார்த்து விட்டேன் இருந்தாலும் மறுபடியும் மறுபடியும் பார்க்க தோன்றுகிறது என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

மகேஸ்வரி என்பவர் உயிருடன் இருந்திருந்தால் படிப்பின் உச்சம் தொட்டிருப்பாள் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.மற்றொருவர் ஒரே அழுகையாக வருகிறது இந்த வீடியோவை பார்த்தால் மனவேதனை தருகிறது என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Click  விக்ரமின் புதிய படத்தின் செய்தி

Leave a Reply

Your email address will not be published.