‘கோபக்கனல்கள் தீராதா’ ட்ராக்கை இன்று வெளியிடும் அசுரன்.!!
இயக்குனர் பாலு சர்மா இயக்கத்தில் ஹ்ரிஷிகேஷ் மற்றும் ஷெர்லின் சேத் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘உணர்வுகள் தொடர்கதை’. இந்த படத்தில் பிரபல நடிகர்கள் யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இயக்குனரே இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தில் இருந்து ‘கோபக்கனல்கள் தீராதா’ என்ற ட்ராக் ஒன்று வெளியாக உள்ளது. அதை பிரபல நடிகர் தனுஷ் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார். தற்போது நிலவி வரும் கொரோனா காரணமாக படங்களின் வெளியீடு தள்ளிப்போவது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.