தொடர்ந்து 6 படங்களில் இருந்து நீக்கப்பட்டேன் : கசப்பான அனுபவங்களை பகிர்ந்த சன்டிவி நாயகி..!!

ஊரடங்கு நாட்களில் நடிகைகள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்கள், குறிப்பாக பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை வித்யா பிரதீப் தனக்கு நேர்ந்த சில கொடுமைகளை பற்றி கூறியிருக்கிறார்.

கேரளாவை சேர்ந்த நடிகை வித்யா பிரதீப், அவள் பெயர் தமிழரசி, விருந்தாளி படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். பின்பு ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு அதிபர், பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, தடம் படங்களில் நடித்தார். கடைசியாக பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்தார். தற்போது ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், தலைவி படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் நாயகி தொடரில் நடித்து வருகிறார்.

இன்ஸ்ட்ராகிராமில் வித்யா வெளியிட்டுள்ள நீண்ட பதிவின் சுருக்கம் பின்வருமாறு: தடம் படத்திற்கு முன்பு என் வாழ்க்கையில் ஒரு மோசமான காலகட்டம் இருந்தது. நான் ஒப்பந்தமாகி இருந்த 6 படங்களில் இருந்து என்னை நீக்கி விட்டு வேறொருவரை ஒப்பந்தம் செய்தார்கள். சம்பந்தம் இல்லாத காரணங்களுக்காக ஒன்றன்பின் ஒன்றாக இது நடந்தது. என் இதயம் உடைந்துவிட்டது. எனக்கு சினிமா ஒத்துவராது என முடிவு எடுத்து நான் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

அதன் பிறகு தடம் பட வாய்ப்பு வந்தது. கடந்தகால கசப்பான அனுபவங்களால் நடிக்க தயங்கினேன். இயக்குனர் மகிழ்திருமேனி பற்றி நண்பர்கள் எடுத்துச் சொன்னதால் பயத்துடன் தான் அந்த படத்தில் நடிக்க சென்றேன். என்னிடமிருந்து சிறப்பான நடிப்பை வெளிக் கொண்டுவர அவரால் முடிந்தது.

தடம் தான் சினிமா துறை மீது எனக்கு நம்பிக்கையை திரும்பக் கொண்டு வந்தது. வெறும் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு இந்த சினிமா துறையில் தாக்குப்பிடிக்க முடியும் என ஒரு நம்பிக்கையை எனக்கு கொடுத்தது. நடிகர்களிடம் திறமையை மட்டும் எதிர்பார்க்கும் ஒரு சில நல்ல இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
என்னைப் போல யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாத் துறைக்கு வரும் நடிகைகள் மிகவும் மோசமான கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். உங்களை ஒதுக்கி வைப்பார்கள், கவனிக்க மாட்டார்கள், ஆர்ட்டிஸ்ட் என்று கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பின்பற்றவில்லை என்பதற்காக.

Click  ஹாலிவுட் தரத்தில் அதிரடி காட்டும் விஷால்..4 மொழிகளில் வெளியானது தரமான சக்ரா டிரைலர்.!!

ஆனால் உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் கடினமாக உழைக்க விருப்பம் இருந்தால் உங்களால் தாக்குப் பிடிக்க முடியும். ஒரு சிறிய வெற்றியைக் கூட நினைத்து உங்களால் பெருமை கொள்ள முடியும். ஏனென்றால் எதுவும் உங்களுக்கு இலவசமாக அல்லது ஒரு விஷயத்துக்கு கைமாறாக கொடுக்கப்படவில்லை. இவ்வாறு வித்யா எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.