ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சியான போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன்..!! வைரலாகும் க்ளிக்ஸ்!!

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வரும் சீரியல் “பூவே பூச்சூடவா”.இந்த சீரியலில் ரேஷ்மா முரளிதரன் முக்கிய கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரின் இயல்பான கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் ரேஷ்மா.

ரேஷ்மா 1992 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார் ஆனால் வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான்.இவர் சென்னை கல்லூரி படிக்கும் போதே மாடலிங் துறையின் மீது உள்ள ஈர்ப்பால் மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்து கொண்டு முதல் 10 இடத்திற்குள் வந்தார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த ஃபேஷன் ஷோவில் இரண்டாவது இடத்தை வென்றார்.

இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ராகவ் உடன் இணைந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற தமிழ் ரியாலிட்டி ஷோவின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியில் இவர் அவர் நடன திறமையையும் மற்றும் நடிப்பினீ மீது உள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது. இதையடுத்து இவருக்கு பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பூவே பூச்சூடவா சீரியலில் சுந்தர் என்ற கதாபாத்திரத்தில் மதன் நடித்துள்ளார். மதன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர்.மதன் மற்றும் ரேஷ்மா இவர்கள் இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் இந்த செய்தியை வெளியிட்டனர்.
இந்த நிலையில் ரேஷ்மா ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Click  ஜான் அளவு உடையில் சூடேற்றும் ஜான்வி கபூர்!! வெளியான புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.