அட நாச்சியார் படத்தில் நடித்த பெண்ணா இது..!! என்னங்க மாடர்ன் உடையில் இப்படி இருக்கீங்க!!
கடந்த 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான “நாச்சியார்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ஐவனா. இந்த திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 2012 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.

இவர் 2000 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவரின் உண்மையான பெயர் அலீனா ஷாஜி.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின்னர் பாலாவின் நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகமானார்
அந்த திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக மற்றும் பரிதாபமான பெண்ணாக நடித்து இருப்பார்.

இதைத்தொடர்ந்து மலையாள படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
பின்னர் 2019 ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படத்தில் மதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஐவனா படங்களில் பார்பதற்கு அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்த இவரை தற்போது நேரில் பார்த்தால் கண்டிப்பாக நம்ப மாட்டீர்கள்.இவர் நிஜ வாழ்வில் ஒரு மாடர்ன் டீனேஜ் பெண்ணாக இருந்து வருகிறார் ஐவனா. இவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக
வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாச்சியார் படத்தில் நடித்த பெண்ணா இது என்று அதிர்ச்சியில் உள்ளனர்.

