இந்த குழந்தை யாருனு தெரியுதா..?? இப்போ இவங்க பிரபல முன்னணி நடிகை புகைப்படங்கள் உள்ளே!!

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள
திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இது என்ன மாயம் திரைப்படத்தில் இவரின் நடிப்பு திறமையால் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

கீர்த்தி சுரேஷ் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள்.
இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்  உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.இவர்
குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இவர்
பேஷன் டிசைனிங் படிப்பை முடித்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.இதையடுத்து தளபதி விஜயுடன் பைரவா, சர்கார், ரெமோ
சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இவர் மகாநதி படத்தில் சாவித்திரியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார் கீர்த்தி சுரேஷ்.இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருடன் எடுத்து கொண்ட சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Click  சூட்டை கிளப்பும் நடிகை கேத்ரீன் தெரசாவின் ..!! தாறுமாறான புகைப்படங்கள் உள்ளே !!

Leave a Reply

Your email address will not be published.