ஜோதிகா கீர்த்தி சுரேஷை தொடர்ந்து நடிகை வரலட்சுமியின் டேனி படமும் OTT யில் நேரடி வெளியீடு!

டேனி நடிகை வரலட்சுமி நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய தமிழ் படம், இப்படம் ஜீ 5 OTTஇல் நேரடியாக வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரு கொலையின் மர்மத்தை கண்டறிய வரும் காவல்துறை அதிகாரியாக வருகிறார் வரலட்சுமி.
ஒரு (Dog Squad) நாய்க்கும் ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கும் இடையிலான உணர்ச்சி பிணைப்பைச் சொல்லியதாம் இப்படத்தின் கதை.

இந்நிலையில் படத்தின் டீஸருக்கு பார்வையாளர்களிடமிருந்து சாதகமான வரவேற்பு கிடைத்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்திய தகவல்களின்படி, தயாரிப்பாளர்கள் இறுதியாக படத்தினை OTT யில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

படம் விரைவில் ஜீ 5 OTT தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிகிறது. வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நடிகை வரலட்சுமி நடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்..

Click  பட வாய்ப்புக்காக இவரும் இப்படி இறங்கிடாரே.‌.!! கிளாமரான போட்டோ ஷூட் நடத்திய நடிகை ரித்விகா!!

Leave a Reply

Your email address will not be published.