’அறம் 2’படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்றால் அந்த படத்தை இயக்க மாட்டேன் இயக்குனர் கோபிநயினார் விளக்கம்.!!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் கோபி நாயனார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’அறம்’. கடந்த 2017ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி நயன்தாராவுக்கு மிகப் பெரிய புகழை பெற்றுக்கொடுத்தது. நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தது இந்த படத்தின் வெற்றி கொடுத்த தன்னம்பிக்கையால் தான் என்று கூறலாம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ’அறம் 2’ படத்தை இயக்க இயக்குனர் கோபி நயினார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான திரைக்கதை தயாராகி விட்ட நிலையில் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஒரு சில இணையதளங்களில் ’அறம் 2’படத்தில் நயன்தாராவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இது குறித்த தகவலை கீர்த்தி சுரேஷ் தரப்பினர் மறுத்துள்ளனர் என்பது என்பது குறிப்பிடதக்கது. ’அறம் 2’படக்குழுவினர் யாரும் கீர்த்தி சுரேஷ் நடிக்க அணுகவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நிலையில் இதுகுறித்து கோபிநயினார் கருத்துக் கூறுகையில் ’அறம் 2’படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்றால் அந்த படத்தை இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷை வேறொரு படத்திற்காக தொடர்பு கொண்டு பேசியதாகவும், ’அறம் 2’ படத்திற்கு பின்னர் அந்த படம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Click  இரண்டாவது இன்னிங்ஸ் க்கு தயாராகும் கேப்டன் விஜயகாந்த் நல்லநிலையில் உடற்பயிற்சி செய்வதாக தகவல்!

Leave a Reply

Your email address will not be published.