மூன்று மொழிகளில் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு வீடியோவை பகிர்ந்த நடிகை குஷ்பூ.!!
கொரோனா நோய் தொற்று உலகில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றியமைத்து விட்டது. தற்போது முகக்கவசம் இல்லாமல் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் பல்வேறு நகரங்களில் இன்றளவும் முழு ஊரடங்கிணை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொரோனா ஊரடங்கு காரணத்தால் பொருளாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இதுகுறித்த விழிப்புணர்வு இன்னும் பல மக்களிடம் ஏற்படாததால் இந்த தொற்று தொடர்ந்து பரவலை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் பல்வேறு பிரபலங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு தெரிந்த மாதிரி பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். அந்தவகையில் குஷ்பு அவர்கள், அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை மூன்று மொழிகளில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த வீடியோவில் அவர் முகக்கவசம் அணிந்தவாறு பேசியிருக்கிறார். முகக்கவசம் எவ்வளவு முக்கியம் என்பதையும் மற்றவர்களையும் முகக்கவசம் அணிய அறிவுறுத்துமாறு கேட்டு கொண்டிருக்கிறார். மேலும் முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள் என்றும், பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவரது விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுக்க கண்டிப்பாக முககவசம் அவசியம் என்பதை அவர் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டியுள்ளார். தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர வீட்டிலிருந்து யாரும் வெளியேற வேண்டாம் என்றும் இதனால் உங்கள் குடும்பத்தை இந்நோயிலிருந்து காப்பாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.