“சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா” பாடலில் நடித்த தேஜா ஸ்ரீ இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான “ஒற்றன்” திரைப்படத்தில் சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்ற பாடலுக்கு நடனமாடி பிரபலமானவர் தான் நடிகை தேஜா ஸ்ரீ. இந்த பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

இவர் 1988 ஆம் ஆண்டு மும்பை மாநிலத்தில் உள்ள மஹாராஷ்ராவில் பிறந்தார். இவரின் உண்மையான பெயர் சோனாளி ஜெய் குமார்.தேஜா ஸ்ரீ மஹாராஷ்டிரவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் மாடலிங் துறையில் இருந்த போது சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடித்திருந்தார்.பின்னர் ஒற்றன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

இதைத்தொடர்ந்து இவர் மதுர,தக்க திமி தா கோடம்பாக்கம்,கல்வனின் காதலி,
சம்திங் சம்திங்,வீராப்பு போன்ற பல படங்களில் ஐட்டம் டான்சராகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவர் ஹிந்தி, மராத்தி,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்தாலும் இவருக்கு இவருக்கு தமிழ் நன்றாக தெரியும்.
தமிழில் தான் இவர் அதிக படங்கள் நடித்துள்ளார்.

பின்னர் 2007 ஆம் ஆண்டு அந்த நாள் ஞாபகம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார் தேஜாஸ்ரீ ஆனால் அந்த படம் கை கொடுக்கவில்லை.அதனால் மராத்தி சினிமாவில் நடிக்க சென்றுவிட்டார். இப்போது மராத்திய திரையுலகில் நடித்து வருகிறார்.இவரின் கவர்ச்சியான சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது‌‌.

Click  நடிகை நதியாவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா ! அம்மாவை மிஞ்சும் அழகு ! முதல்முறையாக வெளியான 2 மகள்களின் புகைப்படம் !

Leave a Reply

Your email address will not be published.