LKG படபுகழ் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அம்மாவிற்கு கொரோனா அதிர்ச்சி செய்தி.!!

உலகம் முழுவதும் கொரொனா தொற்று பலரையும் அச்சுறுத்தி வருகிறது, இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல உலகமே தற்போது ஊரடங்கில் தான் உள்ளது.

அதுவும் இந்தியாவில் கொரொனா வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் கொரோனா எண்ணிக்கை தமிழகத்தில் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த கொரொனா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை, பல பிரபலங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக களம் கண்டு தற்போது ஹீரோவாக அடுத்து இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவருடைய அம்மாவிற்கு கொரொனா என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்.

இதை தொடர்ந்து சென்னை அமைந்தக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரத்திப்போம்.

Click  ஒரு கதை சொல்லட்டுமா சார்.. சிம்புவை இயக்க தயாராகும் சசிகுமார் :யாரும் எதிர்பார்க்காத கூட்டணி.!!

Leave a Reply

Your email address will not be published.