சும்மா சிக்குன்னு மாடர்ன் உடையில் சூப்பர் சிங்கர் மாளவிகா சுந்தர்..!! அலைபாயும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் மாளவிகா சுந்தர்.
இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றது.இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு படங்களில் பாட வாய்ப்புகள் கிடைத்தது.

மாளவிகா தற்போது தென்னிந்திய மொழிகளில் சிறந்த பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் 1992 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பிறந்தார்.
இவரின் அம்மா மியூசிக் ஆசிரியர் என்பதால் சிறுவயதிலிருந்தே பாட்டு பாட கற்று கொண்டார். இவர் தன்னுடைய சிறு வயதிலேயே ரேடியோவில் சிங்கராக பணியாற்றி வந்தார்.

பின்னர் சூப்பர் சிங்கர்,இந்தியன் ஐடல், ஸ்வரபிஷேகம் போன்ற பல்வேறு மொழி தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று கிளாசிக்கல் பாடகி ஆவார்.மாளவிகா சுந்தர் 2003 ஆம் ஆண்டு கங்கோத்ரி திரைப்படத்தில் நுவ் நேனு காளிசுண்டே பாடலை பாடி சினிமாவில் தனது பாடலை தொடங்கினார்.இதைத்தொடர்ந்து தமிழில்
ஈட்டி,100% காதல், கடவுள் இருக்கான் குமாரு,144 போன்ற பல படங்களில் பாடியுள்ளார்.

இவர் வெல்வெட் நகரம் படத்தில் பாடகி மற்றும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது பல நாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பாட்டு பாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Click  சந்தானம் பட நடிகையா இது..? இறுக்கி புடுச்சு இப்படி கிளாமர் காட்டுறீங்களே..!!

Leave a Reply

Your email address will not be published.