டாட்டூ தெரியும் படி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட விக்ரம் வேதா பட நடிகை..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் “விக்ரம் வேதா” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சிரத்தா ஸ்ரீநாத். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிரத்தா ஸ்ரீநாத் 1990 ஆம் ஆண்டு ஜம்மூ காஷ்மீரில் பிறந்தார். இவர் ஒரு பிராமணர் குடும்பத்தை சார்ந்தவர். இவர் தனது சட்டப் படிப்பை பெங்களூரில் உள்ள கல்லூரியில் பயின்றார்.

பின்னர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நாடகங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார்.இவரின் விளம்பரங்களை பார்த்து மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு கோஹினூர் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.பின் 2016 ஆம் ஆண்டு வெளியான இவரின் கன்னட திரைப்படமான யுடர்னில் இவர் நடிப்பு பெருமளவில் பாராட்டப்பட்டது.

இதையடுத்து தமிழில் விக்ரம் வேதா படத்தில் நடித்தார்.பின் இவன் தந்திரன், ரிச்சி, K-13,தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேர்க்கொண்ட பார்வை படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இவர் நடித்த மாறா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது விஷாலுடன் இணைந்து சக்ரா திரைப்படத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது கவுன் உடை அணிந்து கொண்டு இவர் குத்தியுள்ள டாட்டூ தெரியும் படி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Click  நடிகை கோபிகா வா இது..? சூட்டை கிளப்பும் கட்டழகி கோபிகாவின் ஹாட் போட்டோஸ்!!

Leave a Reply

Your email address will not be published.