சென்னையில் கரையொதுங்கிய சீன மொழியில் எழுதப்பட்ட டிரம் ! திறந்தபோது கிடைத்த அதிர்ச்சி ! கைப்பற்றிய காவல்துறையினர்

இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் சுழலில் கடந்தவாரம் எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் . சீனா தரப்பிலும் 35 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இது ஒருபுறம் இருக்க சென்னை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு பகுதியில் ஒரு டிரம் கரையொதிங்கியது

அந்த டிரம்மில் சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் எதோ எழுதப்பட்டிருந்தது . அதை கைப்பற்றிய மீனவர்கள் அந்த பகுதியில் இருந்த இளைஞர்களை அழைத்து கேற்க அதில் “ரீபைன்ட் சைனீஸ் டீ ” என்று எத்துப்பட்டிருப்பது தெரியவந்தது உடனே அந்த டிரம்மை அங்கிருந்தவர்கள் உடைத்துள்ளனர் அப்போது அதில் பல டீ பொட்டலங்கள் இருந்துள்ளது

அதற்குள் அங்கு காவல்துறையினர் வந்து அதை கைப்பற்றினர் ஆனால் அந்த பொட்டலங்களை பார்த்து காவல்துறைக்கு சந்தேகம் வந்ததால் அதை ஆய்வு செய்தனர் அப்போது அது ஹெராயின் வகையை சேர்ந்த “மெத்தம்பெடைமின்” என்ற போதை பொருள் என்பது தெரியவந்தது அதன் மதிப்பு 100 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இதன் மதிப்பை கேட்டு மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் , ஆனால் காவல்துறையினர் வரும் முன்பே டிரம் உடைக்கப்பட்டிருந்ததால் காவல் துறையினர் அங்கிருந்த மீனவர்களை விசாரித்தனர் , அதில் பெட்ரோல் அல்லது டீசல் இருக்கும் என்று தான் அதை உடைத்ததாகவும் , இனி இதுபோல செய்யாமல் காவல்துறைக்கு தகவல் கொடுப்பதாகவும் மீனவர்கள் உறுதியளித்தனர்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள The Public Polls என்ற பக்கத்தை Facebook பின்தொடரவும்

Click  சங்கி என்றால் யார் தெரியுமா ? செருப்படி பதில் கொடுத்த இயக்குனர் பேரரசு மற்றும் சுமந்த சி ராமன் !

Leave a Reply

Your email address will not be published.