அஜித்தின் வலிமை படத்தின் முக்கிய அப்டேட் – தயாரிப்பாளர் போனி கபூர்.

தல அஜித் அவர்கள் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது வலிமை திரைப்படம்.

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பை தவிர படம் பற்றி வேறு எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தற்போது வலிமை படத்தின் Firstlook எப்போது வெளியாகும் என்பது மட்டுமே அஜித் ரசிகர்களின் மிகபெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

வலிமை FL போஸ்ட் பணிகள் முடிந்து விட்ட நிலையில் நடிகர் அஜித் மற்றும் படக்குழுவினர் அனைவரின் ஆலோசனைப்படி படத்தின் FirstLook போஸ்டர் உள்ளிட்ட எந்த ஒரு அப்டேட்டும் கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது ஒரு பாலிவுட் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த பேட்டியில் “வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா தாக்குதல் முடிந்த பின்னரே துவங்கும் என்றும் நான் தயாரித்த அனைத்து படங்களும் தியேட்டரில்தான் முதலில் வெளியானது என்றும் அந்த வகையில் அஜித்தின் வலிமை படமும் கண்டிப்பாக தியேட்டரில்தான் வெளியாகும் எனவும் கூறியுள்ளார் இதனால் கண்டிப்பாக இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்” என்று கூறியுள்ளார் போனி கபூர்.

Click  முன்னழகை எடுப்பாக காட்டி சூடேற்றும் பார்வதி நாயர் !! புகைப்படங்கள் உள்ளே !!

Leave a Reply

Your email address will not be published.