கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை ரித்து வர்மா வெளியிட்ட கிளாமரான புகைப்படங்கள்..!!
தமிழில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்து வர்மா.இந்த படம் மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.
இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் 1990 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை
ஆந்திரா மாநிலத்தில் உள்ள மல்ல ரெட்டிஇன்ஜினியரிங் கல்லூரியில்
இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். பின்னர் மாடெல்லிங் துறையில் ஆர்வம்கொண்டு பல அழகு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவர் மிஸ் ஹைதராபாத் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம்இடத்தினை பெற்றார்

ரித்து வர்மா அணுகொகுண்டா என்ற குறும்படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். பின்னர் பிரேமா இஷக்காதல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் நாராகுமுரண்டு எவடே சுப்பிரமணியம் என்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்

இதையடுத்து இவர் நடித்த “பெல்லி சொப்புழு” திரைப்படம் இவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக
அமைந்தது. இப்படத்தில் நடித்தற்காக இவருக்கு பல விருதுகள் தெலுங்கு திரையுலகில் கிடைத்தது. பின்னர் தமிழில்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “வேலை இல்லா பட்டதாரி” படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தார்.பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் தமிழில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது ரிது வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


