மாடர்ன் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை சுரபி..!! இவரின் அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான “இவன் வேற மாதிரி” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுரபி.இவர் 1993 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இவன் வேற மாதிரி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி குடும்ப பெண்ணாக நடித்ததின் மூலம் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல பெயரை பெற்றார்.

இதனையடுத்து தமிழில் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் “வேலையில்லா பட்டதாரி” படத்தில் இணைந்து பணியாற்றினார்.பின் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.தமிழ் சினிமாவில் அந்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் தெலுங்கு பக்கம் சென்றார்.

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் குடும்ப பெண்ணாக நடித்துவிட்டு பிற மொழி படங்களுக்கு சென்றவுடன் கவர்ச்சியாக நடிப்பார்கள் அதே போல் தான் இவரும் செய்கிறார்.தெலுங்கில் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்.தற்போது தெலுங்கில் மூன்று படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். தமிழில்
அடங்காதே படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது மாடர்ன் உடையில் தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

