மதுரை மைக்கேல் மட்டுமே ஆறுதல்! மத்தபடி படத்தின் ப்ளஸ் னு எதை சொல்றது….. !!

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் நடிகர் சிம்பு நடிப்பில் 2017 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி வெளியாகியது. இப்படம் வெளியாகி இன்றோடு 3 ஆண்டுகள் ஆகிறது. இதனை தொடர்ந்து டிவிட்டரில் 3YearsofAAA என்ற டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 3 கெட்டப்பை ஏற்று நடித்திருந்தார் சிம்பு.
இதில் நடிகை தமன்னா, ஸ்ரேயா மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிம்பு நடித்து வெளிவந்த இந்தப்படம் பார்த்தவர்கள் பலரும் கதறி அழும் அளவுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தது என்று பலரும் கூறினர். இப்படத்தில் வரும் மதுரை மைக்கேல் கேரக்டர் மட்டுமே படத்தின் ஆறுதல். அந்த கதாப்பாத்திரத்திற்கான இசையோ தரம்..

நடிகை கஸ்தூரி எப்படி இந்த கதையில் நடிக்க ஒப்பு கொண்டார் என்பது பலருக்கும் புரியாத ஒன்று.
நடிகை ஸ்ரேயா , தமன்னா இருவரும் இருந்தும் அவர்கள் தரப்பு ரசிகர்களை கூட திருப்தி அடைய வைக்காத படமாக அமைந்தது இந்தப் படத்தின் மைனஸ்.

அஸ்வின் தாத்தா , திக்கு சிவா கதாப்பாத்திரங்கின் வடிவமைப்பில் தெளிவின்மை படத்தின் கதையை நகர விடாமல் செய்தது என்றே சொல்லலாம்.

இப்படம் தரக்குறைவான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக தமிழ் டாக்கீஸ் மாறன் விமர்சனம் படத்தை மேலும் மோசமாக தோல்விக்கு இட்டு சென்றது என்றே சொல்லலாம்.

கிட்டத்தட்ட 25 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தபடம் 5 முதல் 8 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சிம்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மைக்கேல் கதாபாத்திரம் மீண்டும் திரையில் வந்தால் அவர்கள் கொண்டாடாமல் விடமாட்டார்கள் என்பதும் வேறு கதை.

மொத்தத்தில் அன்பானவன், அசராதவன், அடங்காவதவன் படம் பார்த்தவர்கள் “அவ்வளவு தான் இவன்” என தமிழ் சினிமா ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு ஒரு கசப்பான அனுபவத்தை தந்த படம் என்றே சொல்லலாம்.

Click  போலிஸாக நடித்ததற்கு வெட்கப்படுகிறேன்.கேப்டன் விஜயகாந்த் வைரல் வீடியோ.!!

சிம்பு அதன் பின்னர் தனது சினிமா கேரியரில் மிகப்பெரிய அளவில் தெளிவாகவும் சரியாகவும் முடிவை எடுத்து நடித்து வருவதால் அவர் ஒரு சில படங்களில் நடித்தாலும் நல்ல கதைகளை தேடி நடிக்கிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.