திருமணத்திற்கு ஊடகங்கள் வேண்டாம் !அழைப்பு இல்லை. ராணா டகுபதி மற்றும் மிகிகா பஜாஜ் குடும்பம்…

பல ஆண்டுகளாக சிங்கிளாக சுற்றி வந்த ராணா தான் மிங்கில் ஆனதை மே12ம் தேதி அதிரடி அறிவிப்பாக வெளியிட்டார்.

தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாக கூறியவர் விரைவில் தங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் போட்டோவுடன் அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ஆனால் இருவருக்கும் ரகசியநிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. மாப்பிள்ளை கெட்டப்பில் ராணாவும், பட்டுப்புடவையில் மிஹீகாவும் சேர்ந்து குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

இதை மறுத்த ராணாவின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ், குடும்ப வழக்கப்படி பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து சந்தித்து பேசும் நிகழ்ச்சி மட்டுமே நடந்தது. அதற்காக பெண் வீட்டார் தங்களது வீட்டிற்கு வந்ததாகவும், நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தார்.

ராணா – மிஹீகா திருமணம் ஆகஸ்ட் 8ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்தன. முன்னதாக ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை 6 நாட்களுக்கு பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு குடும்பத்தினர் திட்டமிட்டனர்.

திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் சேர்ந்து பேசி தாஜ் ஹோட்டலை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பிரம்மாண்டமான திருமணத்தை இருவீட்டாரும் செய்தி ஊடங்கங்களை அழைத்து நடத்த விரும்பவில்லையாம்.

மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே இரு வீட்டாரும் அழைக்க உள்ளார்களாம்.
எது எப்படியோ இவர் குடும்பஸ்தன் ஆனால் சரி..

Click  என்ன ஒரு எனர்ஜி இப்படியெல்லாம் பண்ணுவீங்கலா நடிகை ரஷ்மிகா வெளியிட்ட வீடியோ!!

Leave a Reply

Your email address will not be published.