தன் மருமகன் சிரஞ்சீவி சார்ஜா நினைவாக அர்ஜுன் உருக்கமான வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.

கன்னட நடிகரும், ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் சகோதரியின் மகனுமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த 7ம் தேதி மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. அவரின் காதல் மனைவியான நடிகை மேக்னா ராஜ் தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.

இந்நிலையில் அர்ஜுன் தன் மருமகன் சிரஞ்சீவி சார்ஜாவின் புகைப்படங்களை சேர்த்து வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த வீடியோவை சிரஞ்சீவியின் தம்பி த்ருவா சாஜ்ரா சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் அர்ஜுன் சிரஞ்சீவி பற்றி கூறியிருப்பதாவது,

என் இளம் மகனே, நீ மனசு கஷ்டப்பட்டு அல்லது கோபம் அடைந்து யாருடனும் பேசாமல் இரண்டு நாட்களுக்கு எங்காவது சென்றால் அது வேறு. ஆனால் நீயோ திரும்பி வர முடியாத இடத்திற்கு சென்று எங்களை எல்லாம் தண்டித்துவிட்டாய். நான் எப்பொழுது என் கண்களை மூடினாலும் உன்னுடைய சிரித்த முகம் தான் தெரிகிறது.

ஒரு சில நாட்களில் நாங்கள் உன்னை மறந்துவிடுவோம் என்று நீ நினைத்தால் அது தவறு. உன் மரணத்தால் எங்களுக்கு ஏற்பட்ட காயம் என்றுமே ஆறாது. நீ என்றுமே எங்கள் இதயங்களில் இருப்பாய்.

உன் தாத்தா உனக்கு சிரஞ்சீவி என்று பெயர் வைத்தார். அது என்றுமே உண்மையாக இருக்கும். உன் வார்த்தைகள், சிரிப்பு, நினைவுகள், நம் சொந்தம் என்றுமே நிலைத்து நிற்கும். இந்த இழப்பை தாங்க கடவுள் தான் உங்களுக்கு தெம்பை அளிக்க வேண்டும் என்று அனைவரும் சொல்கிறார்கள் சிரு. ஆனால் இது உன் கையில் தான் இருக்கிறது.

Click  LKG படபுகழ் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அம்மாவிற்கு கொரோனா அதிர்ச்சி செய்தி.!!

Leave a Reply

Your email address will not be published.