தொடர் சைபர் கிரைம் த்ரில்லர் படங்களில் விஷால் :சக்ரா படத்தின் டீஸர் வெளியானது.!!

நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் டீஸர் தற்போது வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

விஷால் தொடர்ந்து திரில்லர் கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்த இரும்புத்திரை படம் சைபர் கிரைம் பற்றி தெளிவான வகையில் மிகவும் தீரில்லிங் ஆக படமாக்கப்பட்டது. தமிழ்சினிமா ரசிகர்களின் மத்தியில் இரும்புத்திரை நல்ல மதிப்பு கிடைத்தது. அதே போல் படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் சாதனையும் படைத்தது.

விஷால் அடுத்து நடித்து வெளிவர இருக்கும் சக்ரா படமும் இரும்புத்திரை படத்தை போல சைபர் கிரைம் பற்றியது தான் என டீசர் பார்க்கும் போது தெரிகிறது.

விஷால் தற்போழுது அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழ் மொழிக்கான ஒரு டீசரை சக்ரா படக்குழு வெளியீட்டு உள்ளது. அதில் “ஒரு சைபர் ஹேக்கர் ஒரு வங்கி கொள்ளையனை போன்றவன் தான். ஆனால் அவன் பயன்படுத்தும் ஆயுதம் வேறு விதம் ஆனது. அவனுடைய குறிக்கோள் எப்போதும் திருட்டு மற்றும் கொள்ளைதான்” என காட்டியுள்ளனர். இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளிவரும் என இந்த டீசரில் குறிப்பிட்டுள்ளனர்.

விஷால் இதில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து உள்ளார். இசை இசைஞானியின் இளவரசன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம் செய்துள்ளார்.

தற்போது வெளிவந்துள்ள இந்த சிறிய டீஸர் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அதனால் அடுத்து ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Click  ஜானகி அம்மா நலமாக உள்ளார்.!!

Leave a Reply

Your email address will not be published.