இரண்டாவது இன்னிங்ஸ் க்கு தயாராகும் கேப்டன் விஜயகாந்த் நல்லநிலையில் உடற்பயிற்சி செய்வதாக தகவல்!

TouringTalkies என்று அழைக்கப்படும் இந்த சேனலை சித்ரா லக்ஷ்மணன் தொடங்கி நடத்தி வருகிறார். இதில் சென்ற வாரம் ஒளிபரப்பாகிய சினிமா சினிமா நிகழ்ச்சியில் ” தமிழ் சினிமாவுக்கு சரியான ஒரு தலைமை வேணும் னு நாம நினைத்தது மாதரி நமக்கு ஒரு நல்ல செய்தி கிடைச்சிருக்கு சார்” என்று வெங்கட் சுபா அவர்கள் பேச அப்படியா என்ன செய்தி என்று சித்ரா லக்ஷமணன் கேட்கிறார்.

அதற்கு அவர் ” நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமா உடல் நலம் தேறி வருகிறார் சார். வழக்கத்தை விட அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதாகவும் நல்ல முறையில் Active ஆ இருக்கிறாராம்” என்று அவர் கூற.

சித்ரா லக்ஷமணன் அவர்களோ “தமிழ் சினிமா பக்கம் சென்ற வாரத்தில் ஒரே கெட்ட செய்திகளாக வந்திட்டு இருந்துச்சு இன்னிக்கு இப்படி ஒரு நல்ல செய்தி சொல்லிருக்கீங்க அப்போ கேப்டன் விரைவில் பொது வாழ்க்கைக்கு வருவார்னு சொல்லுங்க” என்று சொல்ல
சுபா வெங்கட் அவர்கள் “சார் அவர் நண்பர்கள் கிட்டே எல்லாம் அரசியலை விட சினிமாவுக்கு ஏதாவது செய்யணும்னு சொல்றாராம் சார்” என்று கூறுகிறார்.

“அப்போ விரைவில் கேப்டனை திரையிலும் பார்க்கலாம் னு சொல்லுங்க” என்று சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் கேட்க அவரோ “அது தெரியலை சார் ஆனால் சினிமாவின் தூணாக அவர் இருப்பார் என்பது உறுதி சார்” என்று சொல்கிறார்.

எப்படியோ நம்ம கேப்டன் மீண்டும் வந்து தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசியல் இரண்டிலும் மாஸ் காட்ட ஆரம்பித்தால் போதும்…

Click  'கோபக்கனல்கள் தீராதா' ட்ராக்கை இன்று வெளியிடும் அசுரன்.!!

Leave a Reply

Your email address will not be published.