நடிகை இனியாவின் ஹாட் போட்டோ ஷூட்..!! எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள் !!
தமிழ் சினிமாவில் விமல் நடிப்பில் வெளியான “வாகை சூட வா” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இனியா.இவர் 1988 ஆம் ஆண்டு
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார்.இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி படங்களில் நடித்துள்ளார்.இவர் பல மலையாள தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ஆங்கில குறும்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு இறுதி சுற்றில் வெற்றியையும் பெற்றார். இனியா 2010 ஆம் ஆண்டு வெளியான “பாடகசாலை” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான “யுத்தம் செய்” திரைப்படத்தில் துணை பாத்திரத்தில் நடித்தார். பின்னர் வாகை சூட வா திரைப்படத்தில் நடித்தார்.அந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது இவருக்கு பல விருதுகளையும் பெற்று தந்தது.

இதையடுத்து அருள்நிதியுடன் இணைந்து மௌனகுரு, தங்கர்பச்சானின் இயக்கத்தில் அம்மாவின் கைபேசி போன்ற படங்களில் நடித்தார் ஆனால் அந்த படங்கள் இவருக்கு வெற்றியை கொடுக்க வில்லை. பின் சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், புலிவால் போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.இவர் திறமையாக நடித்தாலும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பிறகு தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கடைசியாக பரத்துடன் இணைந்து பொட்டு திரைப்படத்தில் நடித்திருந்தார்.இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது குட்டையான உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
