காழ்ப்புணர்ச்சி காரணமாக பூட்டிவைத்த கேப்டன் தலைமையில் நடந்த கலை நிகழ்ச்சி வீடியோவை ஊரடங்கு நேரத்தில் மீண்டும் ஒளிப்பரப்பிய முன்னணி சேனல்.!!!

தொன்னூறுகளில் இருந்த நடிகர் சங்க நிர்வாகிகளைப் பார்த்தவர்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயம் நடிகர் சங்கக் கடன். அந்தக் கடன் வட்டிக்கு மேல் வட்டி குட்டிபோட்டு ரூ 4 கோடியானது.

வட்டியை ஓரளவுக்கு குறைக்கச் சொல்லிப் போராடிய அப்போதைய சங்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையிலான நிர்வாகிகள் கலை நிகழ்ச்சி நடத்தி பணம் திரட்டி அந்தக் கடனை அடைத்தனர். பெரும்பாலானோருக்கு இந்த விஷயம் தெரியும்.

அந்தக் கடன் ஏன் ஏற்பட்டது? என்பது பலருக்கும் தெரியாது. அந்தக் கடனுக்கான காரணம் இதே நடிகர் சங்கக் கட்டடம்தான்.

1952-ல் வள்ளலாக வாழ்ந்த கலைவாணரால் தொடங்கப்பட்டது நடிகர் சங்கம். அந்த சங்கத்துக்காக இப்போதுள்ள 19 ஏக்கர் நிலத்தை எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோரின் துணையுடன் வாங்கியவர் கலைவாணர்.

இந்த இடத்தில் ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்று முடிவானதும் அதற்கான பணம் ரூ 1 கோடியை வங்கியில் பெற்றனர்.

சுவாமி சங்கரதாஸ் கலையரங்கம் என்ற பெயரில் ஒரு கட்டடம் கட்டினர். இந்தக் கட்டடத்துக்காக வாங்கிய கடன்தான் குட்டி மேல் குட்டி போட்டு ரூ 4 கோடியாக உயர்ந்து நின்றது.

நடிகர் சங்க கடனை அடைக்க கேப்டன் அவர்கள், அனைத்து முன்னணி நடிகர்களையும் ஒன்றினைத்து, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி, நடிகர் சங்க கடனை அடைத்து, மீதத் தொகையை வைப்பு நிதியாக, வங்கியில் செலுத்திய ஒப்பற்ற சங்க தலைவர் கேப்டன்.

அந்த கலை நிகழ்ச்சிகள் அடங்கிய வீடியோக்கள் தமிழகத்தின் முன்னணி சேனலுக்கு கொடுக்கப்பட்டது அப்போழுது விஜயகாந்த் அரசியல் ஈடுபாட்டில் இறங்கியவுடன் அந்த சேனல் அவர் மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அந்த நிகழ்ச்சி வீடியோ அவர்களின் சமூகவலைதள பக்கங்களில் முடக்கப்பட்டது.

இத்தனை ஆண்டுகாலம் வெளிவராத அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் காட்டப்படாமல் மறைக்கப்பட்ட அற்புத வீடியோ தற்போழுது தமிழகம் லாக்டவுன்னில் இருப்பாதால் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பா காட்சிகள் இல்லாத காரணத்தால் அந்த கலை நிகழ்ச்சியை கையில் எடுத்து ஒளிபரப்பியதே எங்களுக்கு பேரின்பம் தான் என்றும் அந்த டிவி சேனலுக்குக்கு நன்றி எனவும் கேப்டன் ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

Click  கார்த்தியுடன் நடிக்கும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி..!! வைரலாகும் அதிதியின் போட்டோ ஷூட் !!

தான் தலைமையேற்ற நிகழ்ச்சியில் பக்குவமும்,தலைமை பண்பும் உள்ள ஒரு தலைவராக கேப்டன் அவர்கள் மிளிரும் அற்புதம் நடிகர் சங்க கடனை அடைக்க நடிகர் நடிகைகள் அனைவரையும் ஒருங்கிணைத்து தனது தலைமையில் மலேசியா அழைத்து சென்ற கேப்டன் அவர்கள் “”எப்படி அனைவரையும் அரவணைத்து ஒவ்வொருவரின் பெருமையை சொல்லி பாராட்டி பேசுகிறார் என்பதை அனைவரும் பாருங்கள் நண்பர்களே!! என்று அவரது ரசிகர்களும் கட்சி நிர்வாகிகளும் அந்த நிர்வாக திறமை வாய்ந்த வீடியோ காணொளி பாருங்கள் என்று இப்போழுது வைரல் ஆகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.