கற்றது தமிழ் படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது..!! இப்போது அடையாளமே தெரியாம எப்படி இருக்காங்கன்னு பாருங்க !!

தமிழ் சினிமாவில் சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பெரிய நட்சத்திரமாக ஜொலிப்பார்கள். அந்த வகையில் நடிகை வெண்பாவும் ஒருவர். இவர் “காதல் கசக்குதயா” படத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமானார்.இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். “கஜினி”, “சிவகாசி” போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் 2001 ஆண்டு சென்னையில் பிறந்தார்.

இவர் நடித்த முதல் படமான “காதல் கசக்குதயா” படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.அந்த கதாபாத்திரம் இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின் இவர் நடித்த “மாயநதி” படத்தின் மூலம் பெற்றோர்களின் ஆதரவைப் பெற்றார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு நேர்காணலில் தல அஜித்துடன் சேர்த்து நான் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு என்றார். இவர் நடிக்கும் படங்கள் பெருமளவில் பள்ளி காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள். இவர் சுட்டிப் பெண்ணாக இருப்பதால் இவருக்கு பள்ளி மாணவி கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக இருக்கும். அவரின் துடிப்பான பேச்சு, அசத்தலான நடிப்பு அனைவராலும் பேசப்படுகிறது. பல படங்களில் குழந்தைத்தனமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.

இவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கில் கூட சில படங்களில் நடித்து வருகிறார்.தமிழில்” ஆயிரம் ஜென்மங்கள்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார் அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது புதுமணப்பெண் போல் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Click  நம்ம ஒரு பொண்ணுங்க என்ன சும்மாவா ! கிராமத்து தமிழ் பெண்களின் அழகிய நடனம் வைரலாக வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.