உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை தீர்ப்பு ! சமூக நீதி என்பதே கற்பனையா – இயக்குனர் பா.ரஞ்சித் கேள்வி

இயக்குனர் பா. ரஞ்சித் உடுமலை சங்கர் ஆணவ படுகொலை தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த விமர்சித்ததோடு அவர் டிவிட்டர் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளிட்டுட்டுள்ளார்.

அதில் ” இன்று மிகவும் பதற்றத்தை உண்டாக்கிய உடுமலை சங்கரின் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை நிரபராதிகள் என்று விடுவித்த உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

வழக்கை திறன்பட நடத்த இயலாத தமிழக அரசுக்கு கடும் கண்டனங்கள்!!
ஒரு புறம் மேலவளவு வழக்கை போல தண்டனை குற்றவாளிகளை தண்டனை காலத்திற்க்கு முன்கூட்டியே விடுதலை செய்கிறார்கள், இப்போது தண்டனை பெறாமலே ஆணவ கொலையை நிகழ்த்திய குற்றவாளிகளை விடுவிக்கிறார்கள்.

தமிழக அரசில் சமூக நீதி என்பதே கற்பனையா?
இம்மாதிரியான வழக்குகளின் தீர்ப்பு சமூக தளத்தில் பல நல்லுதாரணங்களை உண்டாக்க வேண்டும் என்பதே அனைவரின் தேவை, எதிர்பார்பு.

ஆனால் இந்த வழக்கில் பெற்ற தீர்ப்பு சமூக தளத்தில் உருவாக்கும் மனநிலையை யோசிக்கவே மனம் கவலை கொள்கிறது. ” எனக் கூறியுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *