ரவுடி பேபி சூர்யா திடீர் தற்கொலை முயற்சி!

டிகடாக் புகழ் ரவுடிபேபி சூர்யா இன்று காலை திடீரென தூக்கு போட்டு தற்கோளுக்கு முயன்றுள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் பார்த்து மீட்டு உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு ரவுடி பேபி சூர்யாவுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.. இசசம்பவம் அவரது ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ரவுடி பேபி சூர்யாவின் நிஜப்பெயர் சுப்புலட்சுமி.. தன் நடிப்பு திறமையை காட்ட டிக்டாக்கிற்குள் நுழைந்தவர் பின்னர் லைக்குகளை அதிகம் பெற ஆரம்பித்தவர் ஆடையின் அளவை குறைத்து ஆபாச பேச்சுக்களை அதிகம் பேசி வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார்.

இவர் திருமணமானவர் இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
திருப்பூர் அய்யம்பாளையம் பகுதியில் ஒரு காம்பவுண்ட் வீட்டில் வசித்து வந்தவர் சூர்யா. இவர் சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றவர் அப்போது அங்கே கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்க நேர்ந்துது. பின்னர் சிறப்பு விமான சேவைகள் துவங்கிட, கடந்த 16-ம்தேதி விமானம் மூலம் கோவை வந்தார். அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

ஆனால் அவர் எப்படியோ தனிமைப்படுத்தலில் இருந்து வந்து காம்பவுண்ட் வீட்டிற்கு மீண்டும் வந்து தங்கியிருந்தார். இதனால் பயந்து போன சூர்யாவின் அக்கம் பக்கம் வீட்டார் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாநகராட்சிக்கு தகவல் அளித்தனர்.

அவர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் “இங்க பாருங்க.. நான் சிங்கப்பூரில் ஏசி ரூம்லேயே இருந்துவிட்டேன்.. தமிழ்நாட்டு வெயிலில் இவங்க கிட்ட இருந்து எனக்கு கொரோனா பரவி விடுமோன்னு பயமா இருக்கு.. அதனால அரசு ஆஸ்பத்திரியில் தனி ரூம் எனக்கு வேணும்.. தனி சாப்பாடு வேண்டும்.. அங்கே நான் ஃப்ரீயா பாத்ரூம் கூட போக முடியாது”
என்று அடம் பிடிக்க அவரை அழைத்து செல்ல வந்த காவல்துறை அதிகாரியோ
” நீங்க தான் உலக பேமஸ் ஆச்சே உங்களை தெரியாமல் இருக்குமா ” என்று நைசாக பேசி ஒரு வழியாக அவரை திருப்பூர் ரயில் நிலையத்தில் கொரோனா சோதனைக்கு ஆட்படுத்தினர்.

இந்நிலையில் இதனைப் பற்றி இரு தினங்களுக்கு செய்தி வெளியிட்ட தமிழின் முன்னணி செய்தி சேனல் நிறுவனத்தில் அந்த செயதியை வாசித்த செய்தியாளர் மீது கடும் கோபத்துடன் மிரட்டி டிகடாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் “நேத்து நான் ரயில்வே ஸ்டேஷன் செக்-அப் வந்தேன்.. நீ என்னை வீடியோ எடுத்தே.. உன்னை யாருன்னு கேட்டேன்.. நீ சொல்லல.. ஐ.டி. எதுவும் உன்கிட்ட இல்லை.. சூர்யா ஏர்போர்டில் இருந்து பாதுகாப்பை மீறி தப்பிச்சு ஓடிவந்தார்னு நியூஸ்போடுறே? மோடி ஐயா அனுப்புன ஃபிளைட்லயும், கோவை கலெக்டர் ஐயா போட்ட கன்ட்ரோலையும் மீறி
நான் தப்பிச்சி வந்து இப்படி திமிரா பேச முடியாது..
உன் டிவி டிஆர்பி ஏத்தணும்னா என்னை பத்தி நியூஸ் போடாதே.. என்னை எல்லாம் சீண்டாதே நாறிடுவே.. சரியா. ” என்று பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

செய்தியாளரை சூர்யா இப்படி தாக்கிப்பேசிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த செய்தியாளர் சூர்யா மீது போலீசில் புகார் தந்தார்.. இதையடுத்து வீரபாண்டி போலீசார் சூர்யா மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 500 and 506(2) என்ற ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இது போன்ற சூழலில் , ரவுடி பேபி சூர்யா காலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் சூர்யாவை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்..
அங்கு சூர்யாவுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது..

சூர்யா ஏன் தற்கொலை செய்து கொள்ள முயன்றார், என்ன காரணம், என்பது உடனடியாக தெரியவில்லை.. இது சம்பந்தமாக விசாரணையையும் போலீசார் துவக்கி உள்ளனர்.. இந்த தற்கொலை முயற்சி சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *