படமாகிறது நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வாழ்க்கை வரலாறு

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. இந்த படம் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்படும்.

தயாரிப்பாளர்கள் இதனை 2022 இல் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு நிதி Crowd Funding மூலம் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை நிகில் ஆனந்த் இயக்கவுள்ளார்.

கொரோனா தொற்றுநோய் தாக்கம் குறைந்து நிலைமை சரியான பின்னர் ஓரிரு மாதங்களில் படம் தொடங்கப்படும். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் திரைப்பட குழுவின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என்றும் நாடு முழுவதும் இப்படம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

இதோடு நில்லாமல் உலகளவில் அதை வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இதனால் அது அதிகபட்ச மக்களை சென்றடையும் என்றும் கூறப்படுகிறது.

இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை மிகவும் துல்லியமாக உருவாக்க சுஷாந்தின் உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிகில் அவர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது.

Click  " 3 "படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது ! இப்போது எப்படி உள்ளார் தெரியுமா ? வெளியான புகைப்படங்கள் !

Leave a Reply

Your email address will not be published.