நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா ?!

நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது என்று தகவல் பரவி வரும் நிலையில், இதன் உண்மை என்ன என்று பார்க்கலாம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் பரவல் அதிகமாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு தற்போது 19 ஆம் தேதி முதல் கடுமையாக்கப்பட்டு உள்ளது.

தற்போது திரைபிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் இதன் காரணமாக அவர்கள் தனிமையில் இருப்பதாகவும் செய்திகள் உலா வந்தன.

தற்போது இச்செய்திகள் துளியும் உண்மையில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நலமாக இருப்பதாக கூறியுள்ள அவர் தான் படத்திற்குரிய கதை விவாதத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும், நடிகை நயன்தாரா உடற்பயிற்சியுடன் அன்றாட பணிகளையும் செய்து வருவதாகவும் கூறி இந்த வதந்தி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Click  LKG படபுகழ் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அம்மாவிற்கு கொரோனா அதிர்ச்சி செய்தி.!!

Leave a Reply

Your email address will not be published.