பிக்பாஸ் அனிதாவின் தந்தை தீடீர் மரணம்..!! நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக்பாஸ் பிரபலங்கள்!!

கடந்த வாரம் தான் பிக் பாஸ் வீட்டிலிருந்து அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார்.
இவரின் அப்பா ஆர்.சி.சம்பத் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவர் தனது மகனுடன் ஷீர்டி சென்று திரும்பி கொண்டிருந்த போது அவருக்கு ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.அனிதா சம்பத்தின் தந்தை இறந்துவிட்ட செய்தியை அறிந்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனிதா சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.இவரின்‌ அப்பா பிரபல தமிழ் எழுத்தாளர் ஆர்சி சம்பத்.அனிதா சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார்.பின் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று திரைத்துறையில் பிரபலமானார்.இவர் காலா, காப்பான், 2.0, ஆதித்ய வர்மா, தர்பார், டோனி போன்ற பல படங்களில் செய்தி வாசிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.அதில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.இவர் 83 நாட்களுக்கு பிறகு எலிமினேட் செய்யப்பட்டார்.இவர் வந்த அடுத்த நாளே அப்பா இறந்து விட்டார் என்று செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தையின் மரணம் பற்றி உருக்கமான பதிவு செய்துள்ளார். அதில் என்னால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. டாடி நீ வீட்டுக்கு வரனும். உன்கிட்ட நிறைய பேசணும். உன் வாய்ஸ் கேட்டு 100 நாள் மேல ஆச்சு‌ என்று கூறியிருந்தார். இந்நிலையில் அனிதாவின் தந்தையின் மரணத்திற்கு நேரில் ஆறுதல் சொல்ல பிக்பாஸ் பிரபலங்கள் மற்றும் சக போட்டியாளரான அர்ச்சனா,நிஷா,ரேகா, சுரேஷ் ஆகியோர் சென்று வருத்தத்தை தெரிவித்தனர்.

Click  குட்டியான மேலாடையை அணிந்து கொண்டு நடுக்காட்டில் நடிகை துஷாரா விஜயன்..!!

Leave a Reply

Your email address will not be published.