நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!ஆஹா என்ன ஒரு வழுவழுப்பான உடம்பு ஏக்கத்துடன் ரசிகர்கள்!!
நிவேதா தாமஸ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ரஜினிகாந்துடன் “தர்பார்” படத்தில் நடித்து பிரபலமானவர்.
இவர் 1995 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கண்ணூர் பகுதியில் பிறந்தார்.இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சிறுவயதிலேயே நடிக்க தொடங்கினார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராஜேஸ்வரி” சீரியல் மற்றும் “மை டியர் பூதம்” என்னும் நெடுந்தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

நிவேதா 2003 ஆம் ஆண்டு உத்தரா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு 2008ம் ஆண்டு “வெருதே ஒரு பார்யா” திரைப்படத்தில் ஜெய்ராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்திருந்தார்.. இந்த திரைப்படத்தில் நடித்தற்காக இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது பெற்றார்.பின் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த “குருவி” என்ற திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு “நவீன சரஸ்வதி சபதம்” படத்தில் ஜெய்யின் கதாநாயகியாக நடித்தார்.
பின்னர் “பாபநாசம்”, “ஜில்லா” போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு “ஜென்டில்மேன்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.பின்னர் தெலுங்கில் பல படங்களில் நடித்து தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

இவர் தமிழ் திரைப்படங்களை விட தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் இவர் ஹைதராபாத்தில் ஒரு வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகி விட்டார். நிவேதாவை பொறுத்தவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரம் மற்றும் ஹோம்லியான லுக்கில் நடித்து வருகிறார். ஆனால் முதல்முறையாக ஜூனியர் என்டிஆருடன் ஒரு படத்தில் கவர்ச்சிக் காட்டி நடித்துள்ளார்.
