சீன பொருட்களை இனி பயன்படுத்த மாட்டேன் – நடிகை சாக்ஷி அதிரடி

நடிகை சாக்ஷி அகர்வால் இனி தான் சீன பொருட்களை பயன்படுத்தபோவதில்லை என கூறி உள்ளார்.

லடாக் எல்லையில் கால்வான் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் சீனா ராணுவத்திடையே சில தினங்களுக்கு முன்பு நடந்த பயங்கர மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதே போன்று சீன ராணுவத்திலும் உயிரிழப்பு இருக்கும் எனக் கூறப்படும் நிலையில் அதன் எண்ணிக்கையை சீனா தற்போது வரை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது.

வீர மரணம் அடைந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் மிக உருக்கமாக பேசியும், பதிவிட்டும் இருந்தனர்.

இந்நிலையில் சீனாவுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கும் வகையில் சீன தயாரிப்பு பொருட்களை வாங்காமல் புறக்கணித்தல் என்கிற பேச்சுகளை சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்களும் பேசிவருகின்றனர்.

இதனால் சீன பொருட்கள் புறக்கணிப்பு போன்ற ஹாஸ் டேக்குகள் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்ட் ஆனது.

இதனால் நடிகை சாக்ஷி அகர்வால் தான் சீன பொருட்களை இனி பயன்படுத்த மாட்டேன் என்று ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “
நம்நாடு அமைதியை விரும்புகிறது. எனினும் சீனா அதனை சாதகமாக பயன்படுத்தி நமக்கு சொந்தமானதை எடுத்துக் கொள்ள முயற்சி செய்கிறது.

இனி சீன பொருட்களை நான் பயன்படுத்திட மாட்டேன் என உறுதி கூறுகிறேன். இனி சீன பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் .சீனாவை சேர்ந்த சமூக வலைதள கணக்கையும் நீக்கிவிட்டேன். எனக்கு 2,18,000 ரசிகர்கள் பின்தொடர்ந்திருந்தனர்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Click  எனக்கு மேலே சின்னதா இருக்கு கீழே பெருசா இருக்கு ! புலம்பும் நண்பன் பட நடிகை இலியானா ! ஆறுதல் கூறும் ரசிகர்கள் !

Leave a Reply

Your email address will not be published.