” சுஷாந்த் மரணம் சினிமா மாப்பியக்கள் மற்றும் பொய்யான மீடூ பிரச்சாரம் தான் காரணம் ” – கங்கனா ரணவத்.

”சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்குப் பின்னர் பல விஷயங்கள் வெளியே வந்திருக்கின்றன. இது தொடர்பாக சில நேர்காணல்களை படித்தேன், நேரடியாக சிலரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவருடைய தந்தை சொன்னதுபடி பாலிவுட் சினிமா உலகில் இருந்த நெருக்கடியால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார் என்று கூறியதாக ” opindia தளத்துக்கு கங்கனா ரனாவத் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

” நடிகர் சுஷாந்தை திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்திய அபிஷேக் கபூரின் கருத்தின்படி இந்த செயல் திட்டமிட்ட ஓர் பலவீனமான மனதின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல். மேலும் அவருடைய நீண்டகால தோழி சங்கீதா லோகண்டே சுஷாந்த் மரணத்தை சமூக அவமானத்தின் விளைச்சல் என்கிறார்.மற்றொரு விஷயம் என்னவென்றால் அவரை சினிமா மாஃபியாக்கள் சினிமாவில் தடை செய்தது மட்டுமின்றி சிறிது சிறிதாக அவரின் மனதை உடைத்து அவரை நோகடித்து கொலை செய்திருக்கிறார்கள்.

கிசு கிசு எழுதுவதன் நோக்கமே பொய் சொல்வதுதான். மேலும் அவ்வாறான எழுதுவோர் மீது, பெயர் இல்லாத காரணத்தால், சட்டப்பட நடவடிக்கையும் எடுக்க முடியாது. என்னைப் பற்றி எழுதினால் சுருள்முடி கொண்ட, தேசிய விருது பெற்ற, சைக்கோ நடிகை என்று முழுமையாக விவரித்து எழுதுவார்கள். ஆனால் பெயரை குறிப்பிட மாட்டார்கள். டிஎன்ஏ என்ற ஊடகம் சுஷாந்த் தன்னுடைய சக நடிகையை வன்புணர்ச்சி செய்ததாகவும் Me too இயக்கத்தில் அவர் சிறைக்குச் செல்ல போகிறார் என்றும் எழுதியது. இதுபோன்று இன்னும் எத்தனை எத்தனை பொய்கள் இவர்கள் எழுதி இருக்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது.

சினிமா மாஃபியாக்களால் வளர்த்து எடுக்கப்படும் இந்த அறிவுஜீவி பத்திரிக்கையாளர்கள், கழுகு,காகம் போன்ற இவர்கள் உணர்வு ரீதியாக மற்றும் மன ரீதியாக தாக்குதல் தொடுத்து ஒரு உயிர் போக காரணமாகிறார்கள்.

என்னைப் பற்றி எழுதிய பல பொய்களுக்கு நான் சட்ட ரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை பற்றி கீழ்த்தரமாக எழுதிய போது நான் அந்த ஊடகவியலாளரை எதிர்த்தேன். அன்று இரவே 4 ஊடகவியலாளர்கள் ஒன்று சேர்ந்து என்னுடைய படங்களை நிராகரித்து அவற்றை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர்.

Click  படமாகிறது நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வாழ்க்கை வரலாறு

3000 ஊடகவியலாளர்கள் சேர்ந்துகொண்டு ஒரு பெண்ணிற்கு மன ரீதியாகவும் உள ரீதியாகவும் தாக்கும்போது சமூகமும், சட்டமும் வேடிக்கை தான் பார்த்தது.
நான் அவர்கள் மீது வழக்கு தொடுக்க முயற்சித்தேன். அததருணத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு என்னுடைய திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்த பின்னர் அவர்கள் காணாமல் போயினர்.

இந்த சமூகம் அநீதியை அடித்தளமாக கொண்டுள்ளது. நியாயமாக குரலெழுப்ப வேண்டிய நேரத்தில் குரல் எழுப்பத் தவறுகிறது.
இப்படிப்பட்ட பொய் செய்திகளைப் படித்து உற்சாகமடையும் நீங்கள், இந்தி திரையுலக சினிமா வாரிசுகள் குறித்து இது மாதிரி பொய் செய்திகள் ஏன் வருவதில்லை என்று என்றாவது சிந்தித்ததுண்டா? ” என்று எழுதியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.