சீனாவை அடக்க இந்தியா செய்யவேண்டிய 5 விஷயங்கள் ! இவற்றை செய்தலே சீனா பெட்டி பாம்பாய் அடங்கிவிடும் ! இது தான் ராஜதந்திரம்

இந்தியா சீனா இடையே போர் பதற்றம் நிலவிவரும் நிலையில் ராணுவ நடவடிக்கை தவிர்த்து சீனாவை அடக்க 5 தந்திர வழிகள் உள்ளது. முதலாவது திபெத் நாட்டை சீனா அக்கிரமித்து வைத்துள்ளது இந்த பிரச்சனையை ஐநா சபையில் இந்தியா எழுப்பவேண்டும் இது சீனாவிற்கு நெருக்கடியை அதிகரிப்பதுடன் சீனாவின் கவனத்தை திசை திருப்பும்

இரண்டாவது சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் தனது குடிமக்களையே படுகொலை செய்தது அவர்கள் உய்கர் முஸ்லிம்கள் , இந்த விவகாரத்தை ஐநா சபையில் எழுப்பினால் சீனாவுக்கு நெருக்கடி உருவாகும்

மூன்றாவது தைவான் நாட்டை தனது அங்கமாக சீனா கூறிவருகிறது , இந்த விவகாரத்தை இந்தியா கையில் எடுத்து தைவான் நாட்டுக்கு அங்கீகாரம் வழங்க ஐநா சபையில் எழுப்பலாம் . காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக சீனா வந்தபோது , இந்தியா இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கலாம்!

தைவானும் இந்தியாவின் உற்ற நண்பனாக மாறியுள்ளது , தைவானில் புதிய அதிபரும் இந்தியாவை தீவிரமாக ஆதரித்து வருகிறார் . நான்காவது சீனாவுடனான வர்த்தகத்தை குறைத்து அந்த பொருட்களை மேக் இன் இந்தியா மூலம் இந்தியவிலேயே தயாரிக்க முன்வரவேண்டும்

ஐந்தாவது மற்றும் மிக முக்கியமானது தென் சீனா கடலில் இருக்கும் வியட்நாம் , பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுதங்களை கொடுக்கவேண்டும் குறிப்பாக இந்தியாவிடம் இருக்கும் அதிநவீன பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை கொடுக்கவேண்டும் , அங்கு துறைமுகம் , விமானப்படைத்தளம் உள்ளிட்ட கட்டமைப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும் . மேற்கண்ட செயல்களை செய்தால் சீனாவை எளிதில் நெருக்கடிக்குள்ளாக்கலாம்

இதுபோன்ற செய்திகளை உடனக்குடன் படிக்கச் The Public Polls என்ற நமது Facebook பக்கத்தை பின்தொடரவும்

Click  பீகார் எங்களுக்கு சொந்தம் புதிய சர்ச்சையை கிளப்பும் நேபாளம் ! சொந்த மக்களே போராட்டம் ! முழு விவரம்

Leave a Reply

Your email address will not be published.