சாட்டை பட நடிகை வெளியிட்ட க்ளாமரான புகைப்படங்கள்..!! இளைஞர்களை கவர்ந்து வரும் மஹிமா.. ஹாட் க்ளிக்ஸ்!!
தமிழ் சினிமாவில் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி நடித்திருந்த “சாட்டை” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார்.ஆனால் இதற்கு
முன் இவர் “காரியஸ்தன்” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார்.அந்த படத்தில் நடிகர் திலீப்பிற்கு சகோதரியாக நடித்திருந்தார்.இவர் 1994 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் முறையாக நடனம் மற்றும் பாடலை கற்று உள்ளார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு சாட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பள்ளி பருவத்தில் எப்படி படிக்க வேண்டும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்ட படம்தான் சாட்டை.இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து இவர் “குற்றம் 23”, “கொடி வீரன்”, “இரவுக்கு ஆயிரம் கண்கள்”, “அண்ணனுக்கு ஜே” போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து மலையாள மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெளியான “மாகாமுனி”, “அசுரகுரு” போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை தேடித்தந்தது. தற்போது நான்கு மொழிகளில் உருவாகும் இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் “கிட்னா” படத்தில் நடித்து வருகிறார்.அந்த படத்தில் மிகவும் தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இவர் குட்டையான உடையில் நாய் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

