கும்கி நடிகருக்கு சிம்பிளாக திருமணம் ! பெரிய குடும்பத்தில் எளிய முறையில் நடைபெறும் காதல் திருமணம்..

இயக்குனர் ராஜேஷின் பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் மொட்டை ராஜேந்திரன் மகனாக ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார் அஸ்வின் ராஜா ஆர்யா மற்றும் சந்தானம் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர் ஆர்யா சந்தானம் இருவரும் இணைந்து துவங்கும் டுதொரியல் காலேஜில் மாணவராக அஸ்வின் ராஜா நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு அஸ்வின் ராஜா கும்கி திரைப்படம் வாயிலாக பெரிய அளவில் பேசப்ட்டார். இவரும் தம்பி ராமையாவும் நடித்த காமெடி காட்சிகள் இன்று வரையிலும் பேசப்படுகிறது. விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமான அந்த படத்தில் உண்டியல் என்ற ரோலில் நடித்திருந்தார் அஸ்வின்.

அப்படத்திற்கு பிறகு கும்கி அஸ்வின் என்றுதான் இவரை ரசிகர்கள் சினிமாத்துறையினர் அழைக்கத் துவங்கினார்.
அதற்கு பிறகு தற்போது வரை பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார் அஸ்வின். தற்போது வரும் ஜூன் 24ஆம் தேதி அஸ்வினுக்கு திருமணம் நடைபெற உள்ளது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் வி சுவாமிநாதன் என்கிற தயாரிப்பாளரின் மகன் தான் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வினுக்கும் அவர் 4 வருடமாக காதலித்து வரும் வித்யா ஸ்ரீ என்ற பெண்ணுக்கும் வரும் ஜூன் 24ஆம் தேதி வீட்டிலேயே திருமணம் நடைபெற உள்ளது. அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி இந்த திருமண விழா சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் நடைபெற உள்ளது.

இதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்களாம்.
காதலி வித்யா ஸ்ரீ சென்னை கேகே நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகள். இவர் அமெரிக்காவில் எம்எஸ் படிப்பை படித்தவர்.

கும்கி அஸ்வினின் திருமணம் கொரோனா லாக் டவுன் காரணமாக மிகவும் எளிமையான முறையில் நடைபெற உள்ளது.

Click  இந்த வயசுலயும் இப்படியா ..!! இளம் நடிகைகளுக்கே சவால் விடும் தெலுங்கு நடிகை..!!

Leave a Reply

Your email address will not be published.